நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக, பெரும்பான்மையுடன் ஆட்சியமைவுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்கிறார். அண்ணா, கருணாநிதியைத் தொடர்ந்து, திமுக சார்பில் ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகிறார்.
'சாதி, மதம் கடந்து சமூக நீதியை நிலை நாட்ட வாழ்த்துகள்’ - tamil nadu election results
சாதி மத வேறுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலை நாட்ட, சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்துகள் கூறியுள்ளார்.
!['சாதி, மதம் கடந்து சமூக நீதியை நிலை நாட்ட வாழ்த்துகள்’ director pa ranjith](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11619782-thumbnail-3x2-stalin.jpg)
இந்நிலையில், அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். அவ்வழியே, இயக்குநர் பா. ரஞ்சித் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளைக் கடந்து சமூகநீதியை நிலைநாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.