தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இருப்பைவிட அதிகமாகத் தடுப்பூசி செலுத்தியது எப்படி? -செல்வ விநாயகம் விளக்கம்

தமிழ்நாட்டில் இருப்பைவிட அதிகமாகத் தடுப்பூசி செலுத்தியது எப்படி என்பது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/09-July-2021/12405862_selva.mp4
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/09-July-2021/12405862_selva.mp4

By

Published : Jul 9, 2021, 5:07 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி ஜூலை 7 ஆம் தேதி வரையில் 1.59 கோடி நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையில் 1.57 கோடி தடுப்பூசிகள் வந்தன. தடுப்பூசி பெறப்பட்டதைவிட கூடுதலாக செலுத்தப்பட்டது எப்படி என ஊடகங்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.

அறிவியல் பூர்வமாக இது சாத்தியமானது

அதில், “தடுப்பூசியை பொறுத்தவரையில் 10 பேருக்கு செலுத்த வேண்டிய பாட்டிலில் 12 நபர்களுக்கு செலுத்தும் வகையில் வந்துள்ளது. அறிவியல்பூர்வமாக இது சாத்தியமானது. பொது மக்களுக்கு 0.5 மில்லி என்றால் அது சரியாக போடப்படும். அறிவியல் பூர்வமாக புரிந்துகொண்டால் நமக்கு சரியாக தடுப்பூசி செலுத்தியது தெரியும்.

தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் ஒரு பாட்டிலில் மேலும் இரண்டு பேருக்கு செலுத்தும் வகையில் தருவார்கள். 10 பேருக்கு போட வேண்டியதில் 12 பேருக்கு செலுத்துவதில் அறிவியல் பூர்வமாக சரியானதாகும்.

பொது மக்களுக்கான தடுப்பு மருந்து எந்த இடத்திலும் குறைக்கப்படவில்லை

சிரஞ்சியில் தடுப்பூசி மருந்தை ஏற்றும் போதும், தடுப்பூசியில் காற்று குமழிகள் இல்லாமல் அகற்றுவதற்கான பணிகளை செய்யும் போதும் வீணாகும் மருந்துகளையும் கருத்தில் கொண்டு தயாரிப்பு நிறுவனங்களே கூடுதலாக 10 பேருக்கு செலுத்த வேண்டிய மருந்து பாட்டிலில் 12 பேருக்கு செலுத்தும் வகையில் அனுப்பி வைப்பார்கள்.

கூடுதலாக அளிக்கப்படும் தயாரிப்பு நிறுவத்தினை பொறுத்து 16 முதல் 24 சதவீதம் வரையில் அளிப்பாார்கள்.அதில் இருந்து தான் மருந்துகளை செலுத்தினோம். இதனால் பொது மக்களுக்கான தடுப்பு மருந்து எந்த இடத்திலும் குறைக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம்
இதையும் படிங்க:ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்ற இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details