சென்னை தாம்பரம் அடுத்த சக்திநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வரதன். இவரது மகன் கவுதம் (8) பீர்க்கன்கரணை பேரூராட்சிக்குள்பட்ட பூங்காவிற்கு விளையாட சென்றார்.
அங்கு மின் விளக்கில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த வயர், சிறுவன் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
பேரூராட்சி இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு நேற்று (மார்ச் 2) நடந்த இந்தச் சம்பவம் பல்வேறு நாளிதழ்களில் செய்தியாக வெளியாகின. அதனடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும் இது தொடர்பாக பேரூராட்சி இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக நிர்வாக இயக்குநர் ஆகியோர் இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர்களின் அலட்சியத்தால் கருவிலேயே இறந்த சிசு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு