தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு செக்.. அரசின் அதிரடி உத்தரவு என்ன? - விடைத்தாள் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 18, 2023, 11:13 AM IST

சென்னை:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் 20-ஆம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை எழுதுவதற்கு 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 24-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரையில் 7 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு 21-ஆம் தேதி மாணவர்கள் எழுதிய விடைத்தாள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் செல்வகுமார் முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடைத்தாள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாடவாரியான எண்ணிக்கை விபரமும் அனைத்து முகாம் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடவாரியாகவும், பயிற்று மொழி வாரியாகவும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் ஆங்கில வழி போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில விடை கிடைத்தாள்களை மட்டுமே திருத்த வேண்டும். தமிழ் வழி போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களை மட்டுமே திருத்துவதை உறுதி செய்ய வேண்டும் . இதற்கு ஏற்ப ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்று மாெழியாக கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் இருந்தும் பாடவாரியாக விடைத்தாள்களின் எண்ணிக்கை ஏற்ப தகுதியான ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்கள் ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அந்தப்பள்ளிகான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். எனவே ஆசிரியர்களின் மாெத்த எண்ணிக்கைப் பட்டியலை தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரைவைத்தல் வேண்டும்.
விடைத்தாள் திருத்த அனுப்பாத பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 19-ஆம் தேதி நியமன உத்தரவு வழங்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதிக்குள் முடிக்கவும், மே 4-ஆ தேதிக்குள் மதிப்பெண்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்.. பீர் வேண்டாம் மோர் குடிங்க.. மருத்துவர்கள் கூறும் சம்மர் டிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details