சென்னை:கடந்த 2014இல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தைத் தயாரிப்பதற்காக, ’நான் ஈ’, ’இரண்டாம் உலகம்’ போன்ற படங்களை தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 1 கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குநர் லிங்குசாமி கடனாகப்பெற்றுள்ளார்.
அப்போது, லிங்குசாமி கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கிக்கணக்கில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று(ஆக.22) உத்தரவு பிறப்பித்த 3ஆவது விரைவு நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.