சென்னை:கடந்த 2014ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிப்பதற்காக, ‘நான் ஈ’ மற்றும் ‘இரண்டாம் உலகம்’ போன்ற படங்களைத் தயாரித்த பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து, 1 கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக, பங்குதாரர் என்ற முறையில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கடனாகப் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, இந்த கடனுக்காக இயக்குனர் லிங்குசாமி கொடுத்த 1 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி உள்ளது. இதனால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தீர்ப்பளித்தது.