தமிழில் ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தவர் கே.வி.ஆனந்த். இதனையடுத்து ’அயன்’, ’கோ’, ’மாற்றான்’, ’அனேகன்’, ’கவண்’ மற்றும் ’காப்பான்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர்காதல் தேசம், முதல்வன், நேருக்கு நேர், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார் - கனா கண்டேன்
07:05 April 30
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்ரல்.30) காலமானார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு, இன்று (ஏப்ரல்.30) அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது:
1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் 'தென்மாவின் கொம்பத்து'. இந்த மலையாள படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதினை பெற்றார்.
பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க 'கனா கண்டேன்' எனும் படத்தை முதன்முதலாக இயக்கியவர். அதன் பிறகு தொடர்ந்து 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.
கரோனா அறிகுறி இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அவர் இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.