தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய முயற்சி செய்வேன்.. இயக்குநர் பாக்யராஜ் - அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய முயற்சியை செய்வேன்

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைய என்னால் ஆன முயற்சியை செய்வேன் என இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் இயக்குநர் பாக்யராஜ் சந்திப்பு
ஓபிஎஸ் இயக்குநர் பாக்யராஜ் சந்திப்பு

By

Published : Aug 26, 2022, 9:24 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ்சை இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ், "தமிழ்நாடு மக்கள் நலனுக்காக எம்ஜிஆர் கட்சியை தொடங்கினார். அதற்கு அடுத்து ஜெயலலிதாவும், அதன் பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் வந்தார்கள்.

கட்சி மக்கள் மத்தியில் நல்ல பெயரோடு இருந்தது. இடையில் திருஷ்டி பரிகாரம் போல் சோதனை ஏற்பட்டது. அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் நினைக்கிறார். இதை தான் நானும் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு எம்ஜிஆர் எப்படி கட்சியை விட்டு சென்றாரோ அப்படியே கட்சி வலுவோடு எம்ஜிஆர் ரசிகர்களும், தொண்டர்களும் புத்துணர்ச்சி பெறும் வகையில் கட்சி மீண்டும் வலுப்பெறும்.

ஓபிஎஸ் இயக்குநர் பாக்யராஜ் சந்திப்பு

அதற்கு நானும் கட்சியில் இணைந்து என்னால் முடிந்ததை செய்வேன். என்னால் முடிந்த கட்சி பணியை ஆற்ற தயாராக இருக்கிறேன். எல்லோரும் ஒன்றிணைவார்கள். ஆனால் அதற்கு சிறிது காலம் தேவைப்படும். அதிமுகவில் இருந்தவன் தான். இப்போது முறையாக இணைந்து செயல்படுவேன். எல்லாரும் நல்லா இருக்க வேண்டும். கட்சி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். அனைவரும் ஒன்றிணைய என்னால் ஆன முயற்சியை செய்வேன்' என கூறினார்.

இதையும் படிங்க: காவல் நிலையத்திற்குள் புகுந்து அராஜகம்.. திருநங்கை வீடியோ வைரல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details