சென்னை: தமிழில் முன்னணி இயக்குநரில் ஒருவராக வலம் வருபவர், இயக்குநர் ஹரி. இவர் தாமிரபரணி, ஆறு, கோவில், சாமி, சிங்கம் என பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன், சென்னையில் இன்று (அக்.21) காலமானார். சிறிது காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.