சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவர் கவுதமன், “ இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் எனக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், அறவழியில் போராடிய இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகும் குரல் கொடுக்கவில்லை என்பது அவரின் நேர்மையற்ற போக்கைக் காட்டுகிறது.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்தை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாமல் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அனுமதி கேட்டுள்ளார். இதற்கே பயப்படுகிற ரஜினிகாந்த் தமிழ்நாடு முதலமைச்சராகி எம்ஜிஆர் வழியில் ஆட்சி கொடுப்பேன் என்பது எந்த வகையில் சரியான கூற்றாக இருக்க முடியும். மக்களைப் பார்த்து பயப்படுகின்ற ரஜினிகாந்த், மக்கள் பாதிக்கப்படும் பொழுது மக்களுக்காகக் குரல் கொடுக்காமால், எப்படி நல்லாட்சி தருவார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும்.