சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (ஏப்ரல்.20) நடைபெற்றது. நூலினை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடத் திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ், நடிகர் சிவாஜி கணேசன் மகன் தயாரிப்பாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் பேசிய இயக்குநர் பாக்யராஜ், "நான் பெங்களூரு சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் என்னிடம் அண்ணாமலை ஐபிஎஸ் தொடர்பாக புகழாரம் சூட்டினார்கள். சரியான ஆளைத் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது.