சென்னை:தமிழ் திரைத் துறையில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர்களில் பாலாவும் ஒருவர். சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். இன்றும் பாலாவின் படத்திற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த நிலையில் பாலாவின் பெயரில் மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அவரின் பெயருக்கு கலங்கத்தை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, புகைப்படங்களை கேட்பது போன்ற முறையற்ற செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து சில இயக்குநர் பாலாவிடம் கேட்டபோது அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். இது குறித்து இயக்குனர் பாலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில் தன் பெயரில் உள்ள போலியான கணக்கை முடக்கும் படியும், தனது பெயரை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம். எனது பெயரில் மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக் கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.