சென்னை : ராமாபுரம் பாரதி சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு என்கிற லக்ஷ்மி பிரபாகர்(52).இவர் சினிமா துறையில் 30 வருடங்களாக ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.சூர்யா என்பவர் தான் எழுதியுள்ள பாரதியார் பாடலில் நடிகை பத்மப்ரியாவை வைத்து ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார்.இதையடுத்து இருவரும் இணைந்து பாரதியார் பாடலை ஒளிப்பதிவு செய்து முடித்துள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமி பிரபாகரிடம் நடிகை பத்மபிரியாவின் தொலைபேசி எண் தருமாறு கேட்டு இயக்குனர் ஏ.எல்.சூர்யா கடந்த நான்கு மாதங்களாக தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.