சென்னையைச் சேர்ந்த ஶ்ரீதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ”நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திலுள்ள அருள்மிகு நான்மடிகை பெருமாள் கோயில் சோழ மன்னர்களான கேசரி வர்மா, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கியது.
தமிழ்ப் புலவர்களால் முதல் சங்கம் இங்கே தான் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. 108 விஷ்ணு திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை தற்போது பராமரித்து வருகிறது. இந்தச் சிறப்புமிக்க கோயிலின் கோசாலைக்கு மாடுகள் தானமாக வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், எவரும் தானம் செய்ய முன்வருவதில்லை. மேலும், பல்வேறு சமயங்களில் சிலைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கோயில் உரிய பாதுகாப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.