தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஆர்பிஎப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை!

சிஆர்பிஎப் வீரர்களை வீட்டுவேலைகளில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிஆர்பிஎப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை
சிஆர்பிஎப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை

By

Published : Nov 18, 2022, 10:51 PM IST

சென்னை: உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து(CRPF) நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு கான்ஸ்டபிள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை பார்க்கும்போது எனது உயர் அலுவலர், என்னை ஆடர்லி வேலை பார்க்க உத்தரவிட்டார். ஆனால், அதற்கு நான் மறுப்புத் தெரிவித்தேன்.

கான்ஸ்டபிள் பணிக்கான அனைத்து வேலைகளும் செய்யத் தயாராக இருந்த நிலையில், உயர் அலுவலர்களின் உத்தரவின்பேரில், ஆடர்லியாக(வீட்டு வேலை போன்ற மற்ற பணிகளில் ஈடுபடுத்துவது) பணிபுரிய மறுத்ததால், பழிவாங்கும் நோக்கில் என் மீது குற்றச்சாட்டுகளை கூறி பணி நீக்கம் செய்யப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். எனவே, தனது பணி நீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 மனிதர்களை கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ’’மனிதர்களுக்கு கண்ணியத்தோடு வாழ்வதற்கான உரிமை உள்ளது. கான்ஸ்டபிளை ஆடர்லியாக பணிபுரிய வற்புறுத்துவது, கண்ணியத்துக்கு எதிரான நடவடிக்கை” என்று தெரிவித்துள்ளார். எனவே, மனுதாரரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆடர்லி முறையை ஒழிக்கும் மத்திய அரசின் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆடர்லி முறையைப் பயன்படுத்தி வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உயர் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வினாத்தாள் குளறுபடி: சென்னை பல்கலை.யில் நடைபெற இருந்த தமிழ் தேர்வுகள் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details