தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருவத்தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலை. உடனடியாக வெளியிட உத்தரவு! - Anna University

சென்னை: தேர்வுக் கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களின் செமஸ்டர் (பருவம்) தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High Court
chennai

By

Published : Aug 21, 2020, 2:53 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஹரிகரன், செளந்தர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில், "பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் படித்துவரும் ஏழு லட்சம் மாணவர்களிடம் கட்டணமாக ஆயிரத்து 450 என 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது.

கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பால் வேலை, வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் சார்பாக முன்னிலையான மூத்த வழக்குரைஞர், அண்ணா பல்கலைக்கழகம் பருவத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டது. பருவத்தேர்வுக் கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது எனவும் அறிவித்துவிட்டது.

இதனால் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பணம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வாதம் செய்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத் முன்னிலையாகி, இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி பருவக்கட்டணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details