தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உங்கள் பள்ளிக்கு அருகில் தொழிற்சாலை உள்ளதா - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சொல்வது என்ன? - national green tribunal

தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கல்வி நிறுவனங்கள் துவங்கலாம் என்பது குறித்து பரிந்துரைகளை வழங்க குழு ஒன்றை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

direct-to-state-form-committee-to-how-can-be-set-up-educational-institutions-from-factories-ngt
உங்கள் பள்ளிக்கு அருகில் தொழிற்சாலை உள்ளதா! - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சொல்வது என்ன?

By

Published : May 20, 2023, 2:33 PM IST

சென்னை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த குரும்பாபாளையம் கிராமத்தில் 1990ம் ஆண்டு முதல் இரு வார்ப்பு ஆலைகள் செயல்பட்டு வந்தன. இந்த ஆலைகளின் அருகில் 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியின் நிர்வாகம், ஆலையால் மாசு ஏற்படுவதாக குற்றம் சாட்டி, ஆலைகளை மூட உத்தரவிடக் கோரி, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, 20 ஆண்டுகளுக்கும் மேல் மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளின்படி செயல்பட்டு வரும் வார்ப்பு ஆலைகளுக்கு அருகில் பள்ளியை துவங்கி விட்டு, மாசு ஏற்படுத்துவதாக கூறி, ஆலைகளை மூட உத்தரவிடும்படி கோர முடியாது எனத் தெரிவித்தது.

மேலும், பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நலனை கருதி இருந்தால், ஆலைகளுக்கு அருகில் பள்ளியை துவங்கியிருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்ட தீர்ப்பாயம், தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கல்வி நிறுவனங்களை துவங்கலாம் என எந்த விதியும் இல்லாததால், இதுகுறித்து பரிந்துரைகளை வழங்க பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.

இந்த குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து ஆறு மாதங்களில் உரிய அறிவுறுத்தல்களை பிறப்பிக்கவும் அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. பள்ளியும், வார்ப்பு ஆலைகளும் பசுமைப் போர்வையை ஏற்படுத்தும் வகையில் மரங்களை வளர்க்க அறிவுறுத்திய தீர்ப்பாயம், வார்ப்பு ஆலைகளினால் ஏற்படும் மாசு பிரச்னைக்கு சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறைகளை கண்டறிந்து அவற்றை மூன்று மாதங்களில் அமல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

ABOUT THE AUTHOR

...view details