இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட உடனே அவர்களை விடுவிப்பதற்கான கோப்பில் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை எட்டு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போட்டு வைத்திருப்பவர்கள், இனியும் காரணங்களைத் தேட முடியாது.
ஏழு பேர் விடுதலை... ஆளுநரே உடனடியா நடவடிக்கை எடுங்க! டிடிவி வலியுறுத்தல் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
சென்னை: ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுதியுள்ளார்.
டிடிவி தினகரன்
இதற்கு மேலும் அவர்களின் விடுதலையை தாமதப்படுத்தினால் உச்ச நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் அவமதிக்கும் செயலாகவே அது அமையும். எனவே துளியும் தாமதமின்றி ஏழு பேரையும் விடுதலை செய்திட தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.