தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு!

சென்னை:சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்களை விட்டுவிட்டு டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் மீது மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தடை கேட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

By

Published : Sep 24, 2019, 6:39 PM IST

hc

டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான எஸ்.பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் தனிநபர்கள், நிறுவனங்கள், அரசு துறைகளுக்கு டிஜிட்டல் பேனர்கள் அடித்து தருவதாகவும், பிரிண்டிங் தொழிலில் பல லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுபஸ்ரீ மரணத்தை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீசில்,
தங்கள் அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் விதிகள் மீறி பேனர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தை காட்டக்கூடாது. எனவே, எங்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும், எங்கள் தொழிலில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் முறையிட்டனர். மனுவை தாக்கல் செய்யுங்கள் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details