தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இ-பாஸ் சிரமங்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும்' - இ பாஸ் குறித்து முதலமைச்சர்

சென்னை: இ-பாஸ் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

minister-vijayabaskar
minister-vijayabaskar

By

Published : Jul 25, 2020, 4:04 PM IST

சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், அவர்களின் நலன் ஆகியவை குறித்து விசாரித்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அதிகப்படியான எண்ணிக்கையில் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பரவல் தடுப்பு முறைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதால் பெருமளவு கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் 1,513 கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்க்கப்பட்டு தாய்சேய் நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இ-பாஸ் பெறுவதில் ஏற்படும் குழப்பங்கள், சிரமங்கள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும். சாதாரண சளி, காய்ச்சல், உடல் வலி இருப்பவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:வட்டம், வட்டம் சாரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டிகள் அமைக்கப்படும்!

ABOUT THE AUTHOR

...view details