தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜூலை 15ஆம் தேதி வரை அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணிக்குச் செல்ல வேண்டாம்!' - Differently abled govt officers exempt from working till july 15

சென்னை : அரசுத் துறைகளில் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளிகள் ஜூலை 15ஆம் தேதி வரை பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Chennai
Chennai

By

Published : Jul 8, 2020, 9:06 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளான மார்ச் 24ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ஆணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜூன் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட விலக்கினை நீட்டிக்குமாறு நல இயக்குநர் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில், தனியார்; அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான நாள்களுக்கு மட்டும் அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கிண்டியில் அதிநவீன கரோனா மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர்...!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details