சசிகலாவை விடுவிக்க கோரிக்கை வைக்கவில்லை - டிடிவி தினகரன் - TTVDhinakaran
சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என அமமுக சார்பில் கோரிக்கை வைக்கவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என அமமுக சார்பில் சிறை நிர்வாகத்திற்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. விடுதலை குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை. சசிகலா பரோலில் வருவதற்கும் எந்த காரணமும் இல்லை” இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.