தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - வெளியான வைரல் புகைப்படம்! - Dhruv Vikram

மாரிசெல்வராஜ் படத்திற்காக கபடி பயிற்சி எடுத்து வருகிறார் துருவ் விக்ரம். இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கபடி பயிற்சி எடுக்கும் துருவ் விக்ரம்
கபடி பயிற்சி எடுக்கும் துருவ் விக்ரம்

By

Published : Sep 24, 2021, 8:33 PM IST

சென்னை: இயக்குநர் மாரிசெல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

அதனைத்தொடர்ந்து அவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய 'கர்ணன்' திரைப்படம் விமர்சனரீதியாகவும் வசூலிலும் வெற்றிபெற்றது. இதன்மூலம் மாரிசெல்வராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரானார்.

இவர் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பெயரிடப்படாத படத்தை எடுக்க உள்ளார். இதில் கபடி வீரராக துருவ் நடிக்கிறார்.

இதற்காக துருவ் கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கிறார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, இந்தப் புதிய படத்தை மாரிசெல்வராஜ் இயக்க உள்ளதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:டாக்டர் ட்ரெய்லர் - வெளியானது அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details