மத்திய சென்னை தொகுதியில் திமுக மகளிர் அணி சார்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை தயாநிதி மாறன் திறந்து வைத்தார்.
மடியில் கனம் இல்லையென்றால் ஏன் அச்சப்பட வேண்டும் - தயாநிதி மாறன்
சென்னை: மடியில் கனம் இல்லையென்றால் ஆட்சியாளர்கள் ஏன் அச்சப்பட வேண்டும் என மத்திய சென்னை திமுக நாடாளுமன்றத் வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மகளிர் அணி சார்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி மனையை திறந்து வைத்தது மகிழ்ச்சியளிகிறது. பொள்ளாச்சியில் மகளிருக்கு எதிராக நடந்த அநீதியையும், உண்மைகளையும் எடுத்துரைத்து, அந்த சம்பவத்திற்கு துணை நிற்கும் துணை சபாநாயகர் ஜெயராமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எங்கள் மகளிர் அணியினர் பரப்புரை மேற்கொள்வார்கள்.
மேலும் வருமானவரி துறையை மோடி அரசு தவறுதலாக பயன்படுத்தி வருகிறது. ஆட்சியாளர்கள் பேச்சை கேட்டு தவறு செய்யும் அதிகாரிகள் மீது எங்கள் ஆட்சியில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கொடநாடு விவகாரம் பற்றி பேச கூடாது என்று அதிமுகவினர் சொல்கிறார்கள். மடியில் கனம் இல்லை என்றால் ஏன் பயம் கொள்கிறீர்கள். தப்பு செய்ததை மறைக்கவே ஆட்சியாளர்கள் முயலுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.