தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை பாதுகாப்புப் பணியில் பெண் காவலருக்கு விலக்கு - டிஜிபி திரிபாதி - அண்மைச் செய்திகள்

சென்னை: சாலைகளில் பாதுகாப்புப் பணியில் பெண் காவல் துறையினர் ஈடுபட வேண்டாம் என்று டிஜிபி திரிபாதி விலக்கு அளித்து வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.

சாலைகளில் பாதுகாப்பு பணியில் பெண் காவல்துறையினர் ஈடுபட வேண்டாம்
சாலைகளில் பாதுகாப்பு பணியில் பெண் காவல்துறையினர் ஈடுபட வேண்டாம்

By

Published : Jun 13, 2021, 1:58 PM IST

பிரதமர், முதல்வர் உள்ளிட்ட, முக்கியப் பிரமுகர்கள் செல்லும் இடங்களில் உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் முன்னதாகவே சென்று ஆய்வுப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கும்போதே முக்கியப் பிரமுகர்கள் செல்லும் வழித்தடத்தில் சாலைகளில் வரிசையாகப் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபடுவார்கள்.

இந்தப் பணியில் பெண் காவல் துறையினரும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சாலைகளில் பணிபுரியும் போது இவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இயற்கை உபாதையைக் கழிக்க வசதியின்றி தவித்தனர்.

இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் வழி நெடுக பெண் காவல் துறையினர் காத்திருப்பதைத் தவிர்த்து, அவர்களுக்கு வேறு பணி வழங்கத் தமிழ்நாடு காவல் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து முதலமைச்சர் உள்பட முக்கியப் பிரமுகர்கள் செல்லும் சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதிலிருந்து பெண் காவல் துறையினருக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தடுப்பூசி மோசமான பாதிப்பை தடுக்கும் - சி.எம்.சி ஆய்வு முடிவு!

ABOUT THE AUTHOR

...view details