தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டிஜிபி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்க காரணமாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்த டிஜிபி!
தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்த டிஜிபி!

By

Published : Feb 19, 2022, 10:23 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் உள்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குவாதம், சாலை மறியல் உள்ளிட்ட சிறிய பிரச்சினைகள் நடைபெற்றபோது காவல் துறையினர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டியுள்ளனர்.

மேலும் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கி, அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதால் வன்முறைச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. நடந்த சில அசம்பாவிதங்கள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரப்படுகின்றன.

பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள், காவல் தொலைபேசி எண்கள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காவல் துறையினர் விரைந்துசென்று நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்சென்று ஒப்படைக்கும் வரை காவல் கண்காணிப்பு, ரோந்துப் பணி தொடரும். பின் வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாக்கு மையத்திற்குள் சுவர் ஏறி குதித்தவர்களை காவல் துறையில் ஒப்படைத்த ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details