தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டில் மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டி: டிஜிபி சைலேந்திர பாபு துவக்கி வைத்தார் - துப்பாக்கி சுடும் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 2023 ஆம் வருடத்திற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்தார்.

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி துவக்கம்
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி துவக்கம்

By

Published : Jun 16, 2023, 8:49 PM IST

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி துவக்கம்

சென்னை: தமிழகக் காவல்துறையில் 2023 ம் வருடத்திற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் உள்ளத் துப்பாக்கி சுடு தளத்தில் துவங்கியது. இப்போட்டியை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு துப்பாக்கியால் சுட்டுத் துவக்கி வைத்தார்.

இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவதாக இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை மற்ற போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் மொத்தம் தமிழகம் முழுவதும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட காவல் ஆணையரகம் மற்றும் பெண்கள் அணி என மொத்தம் 11-அணிகளிலிருந்து சுமார் 242 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருடம் டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்தியத் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் சேர விருப்பமா..? ஜேஇஇ தேர்வு குறித்து ஜூன் 24 தேதி நேரடி விளக்கம்!

இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, “இன்று பெண் காவலர்கள் உட்பட மாநில அளவில் 242 காவலர்கள் இந்த துப்பாக்கிச்சூடு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதில் இன்சாஸ் பிஸ்டல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் துப்பாக்கிச்சூடு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அகில இந்தியத் துப்பாக்கிச்சூடு போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதி பெறுவார்கள்.

இதுவரை மாநில அளவில் நடந்த துப்பாக்கிச்சூடு போட்டியில் தமிழகக் காவல்துறைதான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக அஸ்ஸாம் ரைஃபில் போட்டியில் தமிழகம் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். காவல்துறையில் மகளிர் பங்கேற்று 50ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவர்களுக்கான சிறப்புப் போட்டியும் நேற்றைய தினம் நடைபெற்றது”, எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஏடிஜிபி ஜெயராம், காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளிகல்வித்துறை அமைச்சர் தொகுதியில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஆதி திராவிடர் பள்ளி

ABOUT THE AUTHOR

...view details