தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமை காவலருக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய டிஜிபி - rs 1 lahk reward to Chief Constable

உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் தலைமை காவலரை வாழ்த்தி ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையாக டிஜிபி சைலேந்திரபாபு வழங்கியுள்ளார்.

டிஜிபி
டிஜிபி

By

Published : Sep 7, 2021, 7:15 PM IST

சென்னை:அடையாறு போக்குவரத்து காவல்துறையில் தலைமை காவலராகப் பணிபுரிபவர் புருஷோத்தமன். இவர் ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு எட்டு முறை மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் ஆணழகன் போட்டிக்கு தேர்வாகியுள்ள புருஷோத்தமன் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் காவலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உதவி

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மூன்று லட்சம் ரூபாய் வரை பணத்தேவை ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை தனக்கு உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவரின் வேண்டுகோளையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் புருஷோத்தமனை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். அவரைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு தலைமை காவலர் புருஷோத்தமனுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொலம்பியா துணை அதிபருடன் மீனாட்சி லேகி சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details