தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்களின் கவனத்திற்கு - சைலேந்திரபாபு என்ன கூறினார் தெரியுமா? - diwali

தீபாவளிப் பண்டிகைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் வீட்டிற்குப் பாதுகாப்பு அளிப்பார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

டிஜிபி அறிவுறுத்தல்
டிஜிபி அறிவுறுத்தல்

By

Published : Nov 2, 2021, 9:34 PM IST

சென்னை: தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகைக்காக வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தால், ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் வீட்டிற்குப் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் காவல்துறை சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 'கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கடை வீதிகள், மார்கெட் பகுதிக்குச் செல்வோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மருத்துவமனை மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி, பட்டாசுகள் வெடித்தல் வேண்டும். தடைசெய்யப்பட்ட வெடிகள், ராக்கெட்டுகள் வாங்கவும், வெடிக்கவும் கூடாது. இதனால் தீ விபத்துகள் தடுக்கப்படும்.

பெற்றோர் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும்.

எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அவசர உதவி எண் 101 மற்றும் அவசர காவல் உதவி எண்கள் 100 மற்றும் 112யைத் தொடர்பு கொள்ள வேண்டும். ரயில் பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்குப் பிடிவாரண்ட்!

ABOUT THE AUTHOR

...view details