சென்னை:பள்ளி, கல்லூரி மாணவர்கள்சமீப காலமாக சிறிய பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்துகொள்ளும் நிலை அதிகரித்து வருவதாகவும், மாணவர்கள் தற்கொலை முடிவுக்குச் செல்லக்கூடாது எனவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “குறைவான மதிப்பெண், சிறு தோல்வி, வகுப்பு தலைவராக நியமிக்கவில்லை போன்ற சிறு காரணங்களுக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை போன்ற மோசமான முடிவுகளை எடுக்கின்றனர். மாணவர்களாகிய நீங்கள் நாட்டின் சொத்து, தற்கொலை செய்து கொள்வது சமூதாயத்திற்கு எதிரான குற்றம்.
நாளடைவில் நாட்டின் முதலமைச்சராகவோ, தலைமை செயலாளராகவோ, விஞ்ஞானியாகவோ, காவல் துறை டிஜிபியாகவோ செயல்பட வாய்ப்புகள் உங்களுக்கு வரலாம். தற்கொலை செய்து கொள்வதால் இது போன்ற வாய்ப்புகளை அடைய முடியாது.