சென்னை: சமீபத்தில் தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி அம்ரேஷ் புஜாரி இன்று (நவ.17) புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கைதிகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய டிஜிபி! - Puzhal Jail
புழல் சிறையில் சிறைவாசிகளுடன் தரையில் அமர்ந்து சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உணவருந்தினார்.
கைதிகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய டிஜிபி
அப்போது சிறையில் இருக்கக்கூடிய மருத்துவமனை, தொழிற்சாலை ஆகியவற்றைப் பார்வையிட்டு, பின்னர் சிறைவாசிகளிடம் அவர்களின் மனக்குறைகளை டிஜிபி கேட்டறிந்தார். அதன் பின்னர் சிறைவாசிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து டிஜிபி அம்ரேஷ் புஜாரி உணவருந்தினார்.