தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சொந்தத் தேவைக்குப் பேருந்தில் சென்றால் காவலர்கள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும்' - chennai dgp order

சொந்தத் தேவைக்குப் பேருந்தில் செல்லும்போது கண்டிப்பாக பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

dgp-silenthrababu-order
dgp-silenthrababu-order

By

Published : Jul 23, 2021, 4:55 PM IST

சென்னை: 2019 ஆம் ஆண்டு திட்டக்குடி காவலர் அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தபோது நடத்துநருடன் வாக்குவாதம் செய்தார். பிறகு மாரடைப்பு ஏற்பட்டு நடத்துநர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது, வாரண்ட் தொடர்பான பணிகள், காவல் துறை பணி தவிர சொந்தத் தேவைக்காகச் செல்லும்போது காவல் துறையினர் பயணச்சீட்டு எடுத்துதான் அரசுப் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு அனைத்து காவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அதனை மற்ற அலுவலர்கள் கண்காணித்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details