சென்னை: கேரள மாநிலம் கொச்சி அருகே, நேற்று முன் தினம் கடலில் 2800 கிலோ எடை மதிப்புள்ள போதைப் பொருட்களை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடல் பகுதிகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு இடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:வால்பாறையில் வரையாடுகளுக்கு தொந்தரவு - வனத்துறையினரின் நடவடிக்கை தேவை
கன்னியாகுமரி, நாகப்பட்டினம், இராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். குறிப்பாக கடலில் ரோந்து பணிகளை தீவிரப் படுத்துவதற்கு கடலோரப் பாதுகாப்பு குழுமத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். அதே போன்று கடலோர மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதையும் படிங்க:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உதிரி பாகங்கள் எடுத்துச் செல்ல மின் நிறுத்தம்; கிராம மக்கள் சாலை மறியல்!