நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் ஓவியம், கோலப் போட்டி நடத்தப்படும் என டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு ஓவிய போட்டியும், பெண்களுக்கு கோலப் போட்டியும் நடத்தப்படும் எனவும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு மாவட்டத்துக்கு 6 பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.