தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்த டிஜிபி தலைமையில் ஆய்வு கூட்டம் - தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபி தலைமையில் ஆய்வு கூட்டம்

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

dgp-led-review-meeting-on-law-and-order-in-tamil-nadu தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபி தலைமையில் ஆய்வு கூட்டம் OR காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்த டிஜிபி தலைமையில் ஆய்வு கூட்டம்
dgp-led-review-meeting-on-law-and-order-in-tamil-nadu தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபி தலைமையில் ஆய்வு கூட்டம் OR காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்த டிஜிபி தலைமையில் ஆய்வு கூட்டம்

By

Published : May 20, 2022, 8:43 AM IST

Updated : May 20, 2022, 8:50 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து இரு லாக் அப் மரணங்கள் நடந்துள்ள நிலையில் வருகிற 21ஆம் தேதி காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐஜிக்க;ள பங்கேற்கும் ஆய்வு கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் ரவுடிகளை ஒழிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் ரவுடிகளின் தற்போதைய நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

அதே போல தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய குற்ற சம்பவங்கள் நடைபெற்றது, எத்தனை சம்பவங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதில் எவ்வளவு பொருட்கள் இதுவரை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கபட உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளதாகத் தெரிகிறது.

டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆய்வு கூட்டம்

மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை மேம்படுத்துவது குறித்தும், தமிழ்நாட்டில் எவ்வளவு புகார்கள் பெறப்பட்டு எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. விபத்துகளைத் தடுக்கவும், சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக டிஜிபி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிட் காயின் முதலீடு ஏமாற்று வேலை- டிஜிபி சைலேந்திரபாபு

Last Updated : May 20, 2022, 8:50 AM IST

For All Latest Updates

TAGGED:

Dgp

ABOUT THE AUTHOR

...view details