தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த காவலருக்கு தமிழ்நாடு டிஜிபி மரியாதை! - தமிழ்நாடு டிஜிபி திரிபாதி

சென்னை: கரோனாவால் உயிரிழந்த வேப்பேரி ஆயுதப்படை காவலர் உருவப்படத்திற்கு தமிழ்நாடு டிஜிபி திரிபாதி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

dgp-honors-the-policeman
dgp-honors-the-policeman

By

Published : Jul 7, 2020, 4:00 PM IST

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராகப் பணிப்புரிந்துவந்த நாகராஜன் என்பவருக்கு ஜூலை 3ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 6) அவர் உயிரிழந்தார். அதன்பின் அவரது உடலுக்குக் குண்டுகள் முழுங்க மரியாதை செலுத்தப்பட்டு, கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கரோனாவால் உயிரிழந்த காவலருக்கு டிஜிபி மரியாதை

இந்த நிலையில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு டிஜிபி திரிபாதி, சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட காவல் உயர் அலுவலர்கள் நாகராஜன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் திருவுருவப்படத்திற்கு டி.ஐ.ஜி மலர் தூவி அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details