தூத்துக்குடி அருகே தனியார் ஓட்டலில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்பவரைக் கண்டித்த உதவி ஆய்வாளர் பாலுவை முருகவேல் சரக்கு வேனால் மோதி கொலைசெய்த சம்பவம் காவல் துறையினரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், காவல் துறையினருக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “தூத்துக்குடியில் உதவி ஆய்வாளர் பாலு தகாத வார்த்தையால் முருகவேலைத் திட்டியதால் ஆத்திரமடைந்து கொலைசெய்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களிடம் காவலர்கள் தகாத வார்த்தையால் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மாவட்டத்தில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடித்தவுடன் உடனடியாகத் தனிப்படையைக் கலைக்க வேண்டும். ஏனெனில் திருப்பூரில் குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறையினர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.