சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை சிறைக்கு அனுப்பிய ஜீவஜோதி, சென்னை டி.ஜி.பி அலுவலகத்துக்கு இன்று வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள எனது மாமியாரின் பூர்வீக சொத்து பத்திரத்தை முன்னாள் சார் பதிவாளர் வேதராசு என்பவரிடம் அடமானம் வைத்து 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன்.
பின்பு ஐந்து மாதம் வட்டி கட்டிய நிலையில், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தை வேதராசு அபகரிக்க முயல்வதாக வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
ஜீவஜோதி செய்தியாளர் சந்திப்பு ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல், தனக்கும், தனது கணவர் சகோதரியின் வீடு புகுந்து வேதாரண்யம் காவல் ஆய்வாளர் ஜெகதீசன், உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ளார்.
இதில் அரசியல் தலையீடு உள்ளதாகவும், நேரம் வரும்போது யார் என்பதை தெரிவிப்பதாகவும் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜீவஜோதியின் முதல் கணவர் கொலைவழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபலுக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.