இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களிலும், அங்கன்வாடி மையங்களிலும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் முதல் சுற்று செப்.14 முதல் செப்.19 வரையிலும் மற்றும் இரண்டாவது சுற்று செப்.21 முதல் செப். 26 வரையிலும் வழங்கப்படவுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1 முதல் 19 வயதுடைய 24.1 கோடி குழந்தைகள் குடல் தொற்று ஏற்படக் கூடிய அபாய நிலையில் உள்ளனர். இது சராசரியாக 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளிடன் 68 விழுக்காடாக உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டடத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களிலும் குடற்புழு நீக்க (அஸ்பெண்டாசோல்) மாத்திரைகள் வழங்கப்படவுளது.