தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sabarimala: கார்த்திகை விரதம் தொடங்கியது.. சென்னையில் அலைமோதிய ஐயப்ப பக்தர்கள்!

கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் துளசி மாலை அணிய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 17, 2022, 2:04 PM IST

கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் துளசி மாலை அணிய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும்.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ஆம் தேதியே மாலை அணிந்து 48 நாட்கள் தொடர் விரதத்தை கடைபிடித்து ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் இருமுடி சுமந்து யாத்திரை செல்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினார்கள். அதன் ஒருபகுதியாக சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அதிகாலை முதலே பயபக்தியுடன் வந்து மாலை அணிந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு சென்று ஐயப்ப பக்தர்கள் தங்கள் குருசாமி கையால் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். மண்டல பூஜைக்கு செல்லவிருக்கும் பக்தர்கள் 48 நாட்களும், அதேபோன்று மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி சுமந்து சபரிமலைக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details