சென்னை:தெலங்கானா மாநிலத்தில், கடந்த 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்த நீதிபதி தேவராஜு நாகார்ஜுன், பள்ளி படிப்பை அரசுப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர், சட்டப்படிப்பை முடித்த நீதிபதி தேவராஜு நாகார்ஜுன் 1986ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு ஏற்றார். மேலும், தந்தையிடம் ஜுனியர் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய அவர், 1991ஆம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வு செய்யபட்டார்.
மேலும், இவர் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு 2022 மார்ச் மாதம் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவராஜு நாகார்ஜுனை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கடந்த மாதம் பணியிட மாறுதல் உத்தரவைப் பிறப்பித்தார்.