தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவருகிறது. இந்நிலையில் குற்றப் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்கள் குறித்து விவரங்களை, வாக்குப்பதிவிற்கு முன்பாக, மூன்று முறை பத்திரிகைகளில் வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதனடிப்படையில், முதல் முறையாக மார்ச் 23 முதல் 25ஆம் தேதிக்குள்ளாகவும், இரண்டாவது முறையாக மார்ச் 26 முதல் 30ஆம் தேதிக்குள்ளாகவும், மூன்றாவது முறையாக மார்ச் 31 முதல் ஏப்ரல் 4ஆம் தேதிக்குள்ளாகவும் என மொத்தம் மூன்று முறையாக குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டுமென தெரிவித்தது.