தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! - பழவேற்காடு

சென்னை: பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

By

Published : Jan 20, 2020, 7:06 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழவேற்காடு ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், கரையோரம் பெருகியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

இதன் காரணமாக ஏரியின் பரப்பு சுருங்கி அதன் சுற்றுச்சூழலும், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். இந்தப் பகுதியில் தனியார் துறைமுகம் கட்டப்படவுள்ளதால், அப்பகுதி மீனவர்களை காலி செய்ய அரசு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details