சில தினங்களுக்கு முன்னர், புதுக்கோட்டையில் நடந்த திமுக இல்லத் திருமண விழாவில் அரசகுமார், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் எனக் கூறியிருந்தார். இதற்கு, பாஜக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது தன்னை பி.டி. அரசகுமார் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசகுமார் கூறுகையில்; 'திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். திமுக தலைவர் பற்றி யதார்த்த பேச்சை நான் வெளிப்படுத்தியதற்கு, சில நாட்களாகவே நான் கேட்கக் கூடாத வார்த்தைகளை எல்லாம் நான் கேட்டேன்.
என்னுடைய நலம் விரும்பிகள் சிலர் என்னிடம் கூறியதாவது, இனி பாஜகவில் இருக்க வேண்டாம், நீங்கள் திமுகவில் இணைய வேண்டிய இடத்திற்குச் செல்வதற்கான காலம் வந்துவிட்டது எனக் கூறியதின் அடிப்படையில் இன்று என்னை திமுகவில் இணைத்துக் கொண்டேன்.