கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்துத் துறைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் மக்கள் இதன் காரணமாக, பெரும்பாலான குடும்பங்கள் அன்றாட தேவைகளுக்கே அரசை எதிர்பார்க்கும் சூழலில் உள்ளனர்.
இதையடுத்து, பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் காவல் துணை ஆணையர் இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் அனைத்து மகளிர் காவலர்களும் இணைந்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆதரவற்றவர்களுக்கு முடித்திருத்தம் செய்யும் காவலர்கள்