தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிதித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் கூட்டுறவு தணிக்கை துறைக்கு 5 இளநிலை உதவியாளர்களும், உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைக்கு 5 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று (ஆக்12) இவர்களுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
இளநிலை உதவியாளர்கள் பணிநியமன ஆணையை வழங்கிய ஓபிஎஸ் - post of junior Assistant
சென்னை: அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பணிநியமன ஆணையை வழங்கினார்.
junior assistants job order
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்வில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குநர் மணிவாசகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'எவ்வளவு புயல் வீசினாலும் மக்களைக் காக்க அரசு தயாராக இருக்கிறது' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி