சென்னை, எழும்பூரில் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைமை அலுவலர், மாவட்ட அலுவலர்கள் ஆகியோருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தில் பயனாளிகள் தாங்களாகவே மேற்கொள்ளும் கட்டுமானம், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுதல், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வீட்டு வசதி உறைவிட மேம்பாட்டு திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் நகர்ப்புற ஏழை எளியவர்களுக்கான பேரிடர்களை எதிர்கொள்ளும் திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்து துணை முதலமைச்சர் கேட்டறிந்தார்.