தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'யாரும் யாருக்கும் அடிமை இல்லை'- உறுதியேற்ற ஓபிஎஸ்

இந்திய கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தையொட்டி கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

Deputy Chief Minister O. Paneer Selvam Commenting on the day of the abolition of slavery
Deputy Chief Minister O. Paneer Selvam Commenting on the day of the abolition of slavery

By

Published : Feb 9, 2021, 9:14 PM IST

இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கொத்தடிமை முறைகளை ஒழிக்கும் பொருட்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றினார். அந்த நாளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை ஒழிப்பு முறை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, இன்று பல்வேறு தலைவர்களும், அமைப்புகளும் கொத்தடிமை முறைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை (பிப்.9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன்.

ஓ. பன்னீர் செல்வம் ட்வீட்

"யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்!" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details