சென்னை எழும்பூரில் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய தலைமை அலுவலக மற்றும் மாவட்ட அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
பணி நியமன ஆணை வழங்கிய துணை முதலமைச்சர்! - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கிவரும் நகர் ஊரமைப்புத் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் பயனாளிகள் தாங்களாகவே மேற்கொள்ளும் கட்டுமானம், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுதல், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் உறைவிட மேம்பாட்டு திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் நகர்ப்புற ஏழை எளியவர்களுக்கான பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைக்கத்தக்க வீட்டு வசதி திட்டம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டறிந்தார். மேற்கண்ட திட்டப்பணிகளை உரிய காலக் கெடுவிற்குள் விரைந்து செயல்படுத்தவும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பின்னர், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கிவரும் நகர் ஊரமைப்புத் துறைக்கு தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.