தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கை தட்டுங்கண்ணே' - சட்டப்பேரவையில் பாராட்டை கேட்டு வாங்கிய துணை முதலமைச்சர்! - துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, வனத்துறை தொடர்பான அறிவிப்பின் இடையில் உரையை நிறுத்திய துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 'கை தட்டுங்கண்ணே' எனக் கூறி பாராட்டைக் கேட்டு வாங்கினார்.

கைத்தட்டச்சொன்ன ஓபிஎஸ்
கைத்தட்டச்சொன்ன ஓபிஎஸ்

By

Published : Feb 23, 2021, 3:35 PM IST

Updated : Feb 23, 2021, 4:29 PM IST

சென்னை:நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கை இன்று (பிப்.23) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் பாராட்டை கேட்டு வாங்கிய துணை முதலமைச்சர்

வனத்துறை தொடர்பான அறிவிப்புகளை அவர் வாசித்துக் கொண்டிருந்தபோது, "பசுமைப் போர்வையினை அதிகரிக்கும் வகையில் அரசு, தனியார் நிலங்கள், வளம் குன்றிய வனப்பகுதிகளில் நடப்பாண்டில் நடப்பட்டு வரும் 72 லட்சம் மரக்கன்றுகள் உட்பட, 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கை தட்ட, தன் பேச்சை இடைநிறுத்திய துணை முதலமைச்சர், பின்னால் திரும்பிப் பார்த்து கை தட்டுங்கண்ணே என்று கூற, பின்னர் அனைவரும் கை தட்டினர். தொடர்ந்து "பாவம் அண்ணன் மட்டும் கைத்தட்டுறாரு" எனக் கூறி தன் அறிவிப்புகளைத் தொடர்ந்தார்.

இதையும் படிங்க:’அறிவிப்பதில் காட்டும் ஆர்வத்தை செயலில் காட்டுவதில்லை’

Last Updated : Feb 23, 2021, 4:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details